அதிபர், ஆசிரியருக்கு இம்மாதம் 05 ஆயிரம் வருகிறது!

அதிபர், ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

“கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தினால் ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டினை முழுமையாக தீர்ப்பத்தில் சிக்கல் உள்ளது.

இதனால் அடுத்த வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அவர்களது சம்பள முரண்பாட்டை, கட்டம் கட்டமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

Related Articles

Latest Articles