கொங்கிறீட் வளையத்தில் சிக்சி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவரொருவரே நேற்று பிற்பகல் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாடசாலைக்கு அருகாமையில் கொண்டு வந்து இறக்கப்பட்டிருந்த கொங்கிரீPட் சிலினடர்களில்; ஒன்று உருண்டதில் அதில் சிக்குண்டு மாணவன் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விநாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த கொங்கிரீட் சிலிண்டர்கள் நேற்று பகல் 12 மணியளவில் தோட்ட நிர்வாகத்தினால் , பாடசாலைக்கு சமீபமாக உள்ள கழிவறைக்கு பக்கத்தில் மைதானத்தில் போடப்பட்டிருந்தாகவும், இந்நிலையில் பிற்பகல் மலசலடம் சென்ற மாணவர் குறித்த சிலிண்டர் போட்டப்பட்டிருந்த பகுதிக்கு சென்றபோது சிலிண்டர் உருண்டு மாணவனுடன் இழுத்து செல்லப்பட்டு பாடசாலை கட்டட சுவர் ஒன்றில் மோதுண்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்டு ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலைவாஞ்ஞன்
