ஜே.வி.பி. அலுவலகத்தை சுற்றிவளைப்பேன் – நிமல் லான்சா மிரட்டல்

” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விபசாரம் சட்டப்பூர்வமாக்கப்படும் என அக்கட்சி உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்து மீளப்பெறப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் அலுவலகத்தை மகளிர் படையுடன் சென்று சுற்றிவளைப்பேன்.”

இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா.

புதிய கூட்டணி எனும் பெயரில் அரசியல் கூட்டணியொன்று இன்று உதயமானது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நிமல் லான்சா,

“ விசபாரம் சட்டப்பூர்வமாக்கப்படும் என்ற கருத்தை ஜே.வி.பியினர் மீளப்பெற வேண்டும், அவ்வாறு இல்லையேல் மீளப்பெற வைப்போம். பெண்களை திரட்டிக்கொண்டு பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் அலுவலகம் சென்று, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க விமர்சனம் முன்வைக்கின்றார், அவரால் சர்வதேசம் செல்ல முடியுமா என்ன?” – என நிமல் லான்சா கேள்வி எழுப்பினார்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விபசாரம் சட்டப்பூர்வமாக்கப்படமாட்டாது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles