துருக்கில் ஏற்பட்ட பூகம்பத்தில் 70 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
அதேவேளை துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.
சுமார் 100 வருடங்களுக்கு பிறகு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.










