மாவனெல்ல நகரில் 30 தற்காலிக வர்த்தக நிலையங்கள் எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்ல நகரின் பஸ் தரிப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள தற்காலிக கடைகளே நேற்றிரவு இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். மாவனல்லை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
