ஆங் சாங் சூகிக்கு சிறை தண்டனை – இராணுவ ஆட்சிக்கு வாசு எதிர்ப்பு

” மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சாங் சூகிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டமை குறித்து கவலை அடைகின்றோம். எந்த நாடாக இருந்தாலும் நாம் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு.” – என்று அமைச்சர் வாசு தேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று மியன்மார் விவகாரம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” தவறிழைத்தால்தான் தண்டனை என மியன்மார் இராணுவ ஆட்சி கூறுகின்றது. அது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு. அது பற்றி ஆராய்ந்துவருகின்றோம்.” – என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

மியன்மார் தொடர்பில் ஆசிய நாடுகள்கூட துரிதமாக செயற்பட்டுள்ளன. எனவே, இலங்கையும் உரிய நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என இதன்போது ரணில் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles