தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 சம்பளம் அவசியம்!

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் சேமிக்கப்பட்ட தேயிலைச் சபையின் நிதியத்தை அரசாங்கம் கொள்ளையடிக்கப் பார்கிறது என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

பதுளையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேயிலைச் சபையில் உள்ள நிதியத்தை பயன்படுத்தி உர மானியமாக 2000 ரூபாவை வழங்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற உர மானியத் திட்டமானது சிறுதோட்ட உரிமையாளர்களையும், பெரிய பணக்காரர்களையும், குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள செல்வந்தர்களையும் போசிக்கும் நடவடிக்கையாகும். இது ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரமும் அதற்கான வியூகமும் ஆகும்.

தேயிலைச் சபையில் உள்ள நிதியம் ஒட்டுமொத்த தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினால் சேமிக்கப்பட்டதாகும். இந்த நிதியத்தை தமக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிக்க எடுக்கப்படுகின்ற அரசாங்கத்தின் நடவடிக்கை பிற்போக்குத்தனமானதாகும். ஆகவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதியத்தை பயன்படுத்தி நியாயமான வகையில் உர மானியத்தை வழங்குவதோடு, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூபா. 2000 ஆக அதிகரிக்கவும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles