மொட்டு கட்சி தனி வழி: ரணிலுக்கு ஆதரவு இல்லை!

ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று மாலை நடைபெற்ற கட்சியின் அரசியல் குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுது.

இதன்படி ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மொட்டு கட்சி ஆதரவு வழங்காது.

மொட்டு சின்னத்தின்கீழ்தான் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் எனவும், வேட்பாளர் யார் என்பது தொடர்பான தகவல் விரைவில் வெளியிடப்படவுள்ளது எனவும் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கட்சியின் இந்த முடிவுக்கு கட்டப்படாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles