ஆப்ரேஷன் ரைசிங் லயன் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

ஆப்ரேஷன் ரைசிங் லயன் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

“ரைசிங் லயன்ஷ” என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

ஈரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த டிரோன்களை இடைமறிக்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டது.

முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் வான்பரப்பு மூடப்பட்டு நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் வான்பரப்பும் மூடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி, ஈரானிய முப்படை ராணுவத் தளபதி முகமது பாகெரி உட்பட பல உயர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஈரானிய அரசு தொலைக்காட்சியின்படி, இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிகிறது.

Related Articles

Latest Articles