” சனத் நிஷாந்த உயிரிழந்தாரா அல்லது திட்டமிட்ட அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மரணம் தொடர்பில் மகிழ்ச்சியடையும் மனநிலையில் எமது இளைய தலைமுறையினர் இருக்கின்றமை கவலையளிக்கின்றது. சனத் நிஷாந்த என்பவர் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளியா, கொலையாளியா? இல்லை.
சனத் நிஷாந்த உயிரிழந்தாரா அல்லது திட்டமிட்ட அடிப்படையில் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. நாமும் நல்லவர்கள் அல்லர், எம்மை அமைதியாக இருக்கவிடுங்கள், எம்மவர்கள் மரணிக்கும்போது நாம் மௌனமாக இருக்கின்றோம், எமது பொறுமைக்கும் எல்லையுண்டு, அதனைமீறும் வகையில் செயற்பட வேண்டாம்.” – என்றார்.
