“ அடுத்த பொதுத்தேர்தலில் களமிறங்குவேன். நிச்சயம் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்வேன்.”
இவ்வாறு சூளுரைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
கம்பஹா மாவட்டத்தில் களனி தொகுதியிலேயே அவர் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்தார்.
மக்கள் தன்னை ஓரங்கட்டவில்லை எனவும், களனி பகுதிக்கு வந்து தன்னை பற்றி மக்களிடம் கேட்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அநுராதபுரம் மாவட்டத்தில் மேர்வில் போட்டியிட்டார். தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
