வடக்குக்கும் , மலையகத்துக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் ஆகியோருக்கிடையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அத்துடன், வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.










