அச்சுப்பணிகள் நாளை முதல் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை(16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

இன்று(15) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்ததன் பின்னர் அச்சுப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வாக்குச்சீட்டில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் தொடர்பில் அரச அச்சகரிடம் வினவிய போது, 2019ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இடம்பெறாது என தெரிவித்தார்.

Related Articles

Latest Articles