அஜித்தும் இல்லை, சூர்யாவும் இல்லை! 2022-ல் அதிக வசூல் செய்த பிரபாஸின் திரைப்படம்

இந்த 2022 ஆம் ஆண்டில் டாப் நடிகர்களின் திரைப்படங்கள் தொடக்கத்தில் இருந்தே வெளியாகி வருகிறது.

அதன்படி ஜனவரி மாதம் வைரஸ் பரவல் காரணமாக திரைப்படங்கள் வெளியாகவில்லை, ஆனால் பிப்ரவரி மாதம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை வெளியானது.

அதனை தொடர்ந்து சூர்யாவின் ET, பிரபாஸின் ராதே ஷ்யாம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின, வரும் வாரங்களில் RRR, பீஸ்ட், KGF, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதனிடையே தற்போது பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம் இந்தாண்டின் அதிக வசூல் செய்த திரைப்படம் என அறிவித்துள்ளனர்.

அஜித்தின் வலிமை, சூர்யாவின் ET உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், ராதே ஷ்யாம் திரைப்படம் தற்போது வரை ரூ.151 கோடி வசூல் செய்து இந்தாண்டின் அதிக வசூல் செய்த திரைப்படம் என அறிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles