அடுத்தடுத்து நான்கு ஏவுகணைகளை பரிசோதனை செய்தது வடகொரியா

அடுத்தடுத்து 4 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது.

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று ஒரேநாளில் அடுத்தடுத்து 4 ஏவுகணைகளை ஏவி வடகொரியா அதிரடி சோதனை நடத்தியுள்ளது. வாஷிங்டனில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் அதற்கு பதிலடியாக வடகொரியா இந்த ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது. அடுத்தடுத்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Related Articles

Latest Articles