அடுத்த தேர்தலில் அரசுக்கு பதிலடி: சாணக்கியன் எச்சரிக்கை!

பொறுப்புகூறல் விடயத்தில் கடந்தகால அரசாங்கங்கள்போலவே தேசிய மக்கள் சக்தியும் செயல்படுகின்றது. இதற்கான பதிலடியை தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் வழங்குவார்கள்.” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ஜெனிவா மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பல விடயங்களைக் கூறியுள்ளார். எனினும், பொறுப்பு கூறலுக்கான பொறிமுறை பற்றி அவர் எதுவும் கூறவில்லை. எமது வடக்கு, கிழக்கு மக்கள் பொறுப்புகூறல் விடயத்தில் மிகவும் கரிசனையுடன் உள்ளனர்.
கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதிலும் கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் எமது மக்கள் உறுதியாக உள்ளனர்.

ஆனால் கடந்தகால அரசாங்கங்கள்போல நீங்களும் அதேவேலையைதான் செய்கின்றீர்கள் என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

காணாமல்ஆக்கப்பட்டோர் அலுவலகம், இழப்பீட்டு பணியகம் போன்ற விடயங்களை பாதிக்கபபட்ட சமூகம் முழுமையாக நிராகரித்த பொறிமுறைகளாகும். அது பற்றி ஜெனிவாவில் கதைத்து பயனில்லை.
புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என உறுதியளித்திருந்தீர்கள்? அது எப்போது வரும்? அதன்ஊடாக தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா என்பது பற்றி தெளிவுபடுத்துங்கள்.

பொறுப்பு கூறல் விடயத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அதற்கான பதிலடி அடுத்த தேர்தலில் அரசாங்கத்துக்கு கொடுக்கப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles