அட ஈஸ்வரா இதுவும் நடந்துவிட்டதா? யாழில் சமையல் எரிவாயு திருட்டு!

யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள வீடொன்றிலீருந்து சமையல் எரிவாயு திருடப்பட்டுள்ளது.

நீதிமன்ற காவலர்கள் கடமையில் உள்ள போது இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடையம் தொடர்பில் வீட்டு உரிமையாளரிடம் வினவியபோது, இரண்டாவது தடவையும் எரிவாயு சிலிண்டர் திருடப்பட்டதாகவும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து தாம் எரிவாயு சிலிண்டரை வீட்டின் வெளியே பொருந்தியிருந்த நிலையிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து நீதிமன்ற காவலில் இருந்த பொலிஸாரிடம் வினவியபோது தமது கடமை நீதிமன்ற எல்லைக்குட்பட்டதாக தெரிவித்தனர் என குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் பல திருட்டு கொள்ளை கொலை என பல சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Related Articles

Latest Articles