அணையா விளக்கு போராட்டத்துக்கு கிழக்கிலும் ஆதரவு!

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் பாலத்தில் நேற்று மாலை தீப்பந்தம் ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா. ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக நடந்து சென்று பின்னர் பாலத்தின் நடுப்பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழில் நேற்று ஆரம்பமான அணையா விளக்கு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles