அதிகரித்தது உணவுப் பொதியின் விலை

உணவுப் பொதியின் விலையானது இன்று முதல் 20 முதல் 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தன் காரணமாக, இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles