அதிகளவு ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் மரணம்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை நுகர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் ஐஸ் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.

Related Articles

Latest Articles