அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் தொடரும்

அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளைய தினமும் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, தமக்கு கிடைக்கவேண்டியதை கேட்கும் அதிபர், ஆசிரியர்களின் ஜனநாயக ரீதியான இன்றைய போராட்டத்தை நசுக்க, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிபர், ஆசிரியர்கள் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் நடாத்திய ரணில்- ராஜபக்ஸ அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து நாளைய தினம் 27 ம் திகதியும் அதிபர், ஆசிரியர்களின் சகயீன விடுமுறைப் போராட்டம் தொடரவுள்ளது.

அதிபர்கள் ஆசிரியர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டிக்கும் விதமாக இன்று போல் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நாளைய தினமும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles