அத்தியாவசியமானவர்களை மட்டும் அழைக்குமாறு அறிவிப்பு

அரச அலுவலகங்களின் பணிகளை முன்னெடுக்க அத்தியாவசியமானவர்களை மட்டும் அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அலுவலகங்களில் மேலதிக ஊழியர்களின் எண்ணிக்கை வீடுகளில் இருந்து பணியாற்றுமாறும் இதனை அதன் பிரதானியே தீர்மானிக்க வேண்டும் எவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் அனைத்து அரச நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles