தமது கட்சியின் பொருளாதாரக் குழுவுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுத்துள்ளது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறியவை வருமாறு,
“ ஐக்கிய மக்கள் சக்தியிடம் சிறந்த வேலைத்திட்டம் உள்ளது. முடிந்தால் எமது அணியில் உள்ள பொருளாதாரக் குழுவுடன், தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்குழு விவாதத்துக்கு வரட்டும். இதற்கு நாம் தயார். எமது சவாலை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாரா? எந்தவொரு தொலைக்காட்சியிலும் இந்த விவாதத்தை எதிர்கொள்ள தயார். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் முகத்திரை கிழியும்;.” – என்றார்.










