அமைச்சரவை உத்தரவுக்கு எதிராக ரிட் மனு

இலங்கை மின்சார சபையுடன் இணைந்து மின்சார கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை வழங்கிய உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட குழு இந்த மனுவை சமர்ப்பித்துள்ளது.

இலங்கை மின்சார சபை, மின்சார அமைச்சர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும், அதனை இலங்கை மின்சார சபையுடன் மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அமைச்சர்கள் சபை உத்தரவிட்டுள்ளதாகவும் மனுதாரர் கோரியுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழு என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், அவ்வாறான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி மின்கட்டண உயர்வு தொடர்பாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் செல்லுபடியாகாத உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles