அமைச்சுக்கள் சிலவற்றின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பைத் திருத்தியமைத்துப் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (17) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தேசிய முன்னுரிமை வேலைத்திட்டத்தின் கீழ் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பில் ஜனாதிபதி செயலகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு திருத்தப்பட்டுள்ளது.
நிதியமைச்சு, வெளிவிவகார அமைச்சு, திறன் மேம்பாட்டுத் தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சின் நிறுவன மற்றும் சட்டக் கட்டமைப்பு ஆகியவற்றிலும் இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.