புதிய அரசில் அமைச்சு பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்திருந்த அழைப்பை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தி, ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்சவுக்கு, . எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் பிரதமர் பதவியையும், ஆட்சியையும் பொறுப்பேற்க தான் தயார் என குறிப்பிட்டு, ஜனாதிபதிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் நேற்று கடிதம் அனுப்பியிருந்தார்.
எனினும், அந்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்கவில்லை. இது தாமதித்து எடுக்கப்பட்ட முடிவு என குறிப்பிட்டு, அமைச்சு பதவிகளை ஏற்பதாக இருந்தால் முன்கூட்டியே அறிவிக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.
இக்கடிதத்துக்கு பதிலளித்தே சஜித்தால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.