ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்ட பின்னர் அக்கட்சியின் முதலாவது மக்கள் கூட்டம் ராஜபக்சக்களின் அரசியல் கோட்டையென கூறப்படும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு தங்காலையில் அம்பாந்தோட்ட மாவட்ட சம்மேளனம் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாமல் ராஜபக்சவின் பங்கேற்புடன் நடைபெறும் என மொட்டு கட்சி அறிவித்துள்ளது.
‘அம்பாந்தோட்டையில் இருந்து சமரை ஆரம்பிப்போம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் குறித்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
