இந்தியா, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக பெருவிழா இன்று (22) நடைபெறுவதை முன்னிட்டு, நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் விசேட பூஜை நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற குறித்த பூஜை வழியாட்டில், ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விசேட அதிதியாக கண்டி இந்திய உதவி தூதரகத்தின் உதவித் தூதுவர் டாக்டர் ஆதிரா எஸ். கலந்து சிறப்பித்தார்.











