அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கும் ரிஷாட் பதியூதீன் தரப்புக்கு புதிய கூட்டணியில் இனி இடமில்லை! – எஸ்.எம் மரிக்கார்

அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கும் ரிஷாட் பதியூதீன் தரப்பிற்கு இனி கூட்டணியில் இடமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய எஸ்.எம். மரிக்கார்,

ஐக்கிய மக்கள் சக்தியில் ரிஷாட் பதியூதீனின் கட்சி கூட்டணிக் கட்சியாக தேர்தலில் போட்டியிட்டது. தற்போது ஐக்கிய மக்கள் சக்தி புதிய கூட்டணியொன்றை ஏற்படுத்தி வருகிறது. அதில் ரிஷாட் பதியூதீனின் கட்சி இல்லை. காரணம், தேர்தலின்போது அந்தக் கட்சி எம்முடன் போட்டியிட்டவர்கள் தற்போது அரசாங்கத்துடன் கூட்டு வைத்துள்ளனர்.

இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர்களே வழங்கினார்கள். நாம் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவு வழங்கியதும் அவர்களே. அதனால் பதியூதீன் எமது கூட்டணியில் தற்போது இல்லை. பதியூதீன் தரப்பினர் தற்போது அரசாங்கத்துடன் இருக்கின்றனர்.

அதனால் அவர்கள் மீது எமக்;கு சந்தேகம் இருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சி என்ற ரீதியில் சிறுவர் துஸ்பிரயோகத்தை எதிர்க்கிறோம். கண்டிக்கிறோம். எனவே, நாம் அரசாங்கத்தில் இல்லை. எதிர்க்கட்சியில் இருக்கிறோம். எனவே. ஊடக நாடகம் ஒன்றை நடத்தாமல், விசாரணை செய்து தண்டனை வழங்குமாறு கோருகிறோம். பதியூதீன் அல்ல யாராக இருந்தாலும் விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு கோருகிறோம்.

Related Articles

Latest Articles