அரசியலில் இருந்து ஓய்வுபெறும் கால எல்லையை அறிவித்தார் தயாசிறி!

” ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவியைக் கைப்பற்றுவதற்கு நான் சூழ்ச்சி செய்யவில்லை. தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றேன்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தயாசிறி ஜயசேகர இடைநிறுத்தப்பட்டுள்ளார், பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நெருக்கடியான காலத்தில் கட்சியுடன் இருந்தேன், கட்சிக்காக உழைத்தேன், ஆனால் கட்சி தலைமையிடம் சிலர் கோள்மூட்டியுள்ளனர். தலைமைப்பதவியை கைப்பற்றும் திட்டம் என்னிடம் இல்லை. அப்படியான துரோக அரசியலில் ஈடுபட்டதும் கிடையாது.

நான் சுதந்திரக்கட்சிகாரன், அடித்து விரட்டினாலும் கட்சியை விட்டுபோகமாட்டேன், கட்சிக்குள் இருந்துகொண்டு மாற்றத்துக்காக போராடுவேன், தொடர்ந்தும் நெருக்கடிகள் வந்தால், எனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆதரவாளர்கள் முடிவெடுப்பார்கள்,

நான் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபடபோவதும் இல்லை. இன்னும் 10 ஆண்டுகள்வரைதான் அரசியலில் இருக்கலாம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles