அரசியலுக்கு வருவாரா மெனிக்கே? அவரே வழங்கிய பதில் இதோ…(Video)

” அரசியலுக்கு வரும் எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் இசைக்கலைஞர். அத்துறையில் பயணிக்கவே விரும்புகின்றேன்.” – என்று இலங்கையின் இளம் பாடகி, யொஹானி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு இசைப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த அவர் இன்று நாடு திரும்பினார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

நீங்கள் அரசிலுக்கு வருவீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, இல்லை என அவர் பதிலளித்தார்.

இலங்கையின் இளம் பாடகி, யொஹானி டி சில்வா பாடிய “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடலானது தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் ‘சூப்பர் ஹிட்’டாகியுள்ளது. இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் அடிக்கடி செவிமடுக்கும் பாடலாகவும் மாறியுள்ளது.

அதேவேளை குறித்த பாடல்மூலம் இலங்கையின் நாமமும் இன்று சர்வதேச மட்டத்தில் உச்சரிக்கப்படுகின்றது. சிங்கள சினிமாத்துறையில் புதியதொரு புரட்சிக்கான அடித்தளத்தையும் இட்டுள்ளது.

(77) 🔺 බාධකවලින් ඉදිරියට යන එක,හැමෝගෙම ඔලුවේ තියෙන්න ඕන..-යොහානි- – YouTube

Related Articles

Latest Articles