அரசியல் தீர்வு திட்டம் குறித்து மைத்திரி, மாவை ஆலோசனை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடினார்.

மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவினுடைய இல்லத்தில் குறித்த சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றது.

இதன்போது மைத்திரியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் நாட்டில் நிலவுகின்ற மத முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

 

Related Articles

Latest Articles