” அரசுக்கு ஆதரவு இல்லை” – சுதந்திரக்கட்சி அதிர்ச்சி வைத்தியம்!

” நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை அரசு முன்னெடுக்கும் பட்சத்தில் அதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது.” – என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடினேன். மாற்றுவழிகள் இருப்பின் அது பற்றியும் ஆராயுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மக்களின் வாழ்க்கைச் சுமையும் அதிகரித்துள்ளது. இருந்தாலும் அடுத்த வருடம் நிவாரணம் கிடைக்கும் ஆண்டாக அமையும்.

இவ்வாறு நாட்டை கட்டியெழுப்புவதற்காக அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும். எல்லாவற்றையும் எதிர்க்கபோவதில்லை. ஆனால் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய திட்டங்களை எதிர்ப்போம்.” – என்றார்.

Related Articles

Latest Articles