‘அரசை விரட்டியடிக்க 69 லட்சம் பேரும் இன்று தயார்’

” ஆட்சிமாற்றத்துக்காக நாம் அவசரப்படவில்லை. ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்கு அவர்களுக்கு வாக்களித்த 69 லட்சம் மக்களே இன்று தயாராகிவிட்டனர்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு,

” தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் என நாட்டு மக்களை இந்த அரசு நடுவீதிக்கு கொண்டுவந்துள்ளது. பொருட்களின் தொடர் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டிலே இன்று ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இல்லை. அரசுகூட இல்லை என்றே கூறவேண்டும். தங்களுக்கு முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துவிட்டனர். எனவே, முடியுமானவர்களிடம் நாட்டை கையளிக்கவும்.

ஆட்சிமாற்றத்துக்கு நாம் அவசரப்படவில்லை. ராஜபக்ச அரசை உருவாக்குவதற்கு வாக்களித்த 69 லட்சம் மக்களே இன்று அரசை விரட்டியடிக்க முன்னின்று செயற்படுகின்றனர். ” – என்றார்.

 

Related Articles

Latest Articles