அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் கறுப்புக் கொடி கட்ட தடை

அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் கறுப்புக் கொடி கட்ட சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.

கறுப்புக் கொடிகளைக் காட்டுவது நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன உறுதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என அமைச்சு கூறியுள்ளது.

தற்போதைய சமூக – பொருளாதார சூழ்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் சில தொழில்முறை நடவடிக்கைகள் தடையாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்த நடவடிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles