தமிழகம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் நான்கு காளைகள் சீறிப்பாய்ந்தன.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு திகழ்கின்றது. அதுவும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாக கருதப்படுகின்றது.
அந்தவகையில் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் செந்தில் தொண்டமானின் காளைகள் சிறப்பாகச் செயற்பட்டன.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலவாரிய சங்கத்தின் தலைவராக செந்தில் தொண்டமான் செயற்படுகின்றது. அண்மையில் இவரின் காளைக்கு தமிழ் நாடு அரசின் சிறந்த காளைக்கான விருது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் வழங்கிவைக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய செந்தில் தொண்டமானின் காளை, கார் ஒன்றை பரிசாக வென்றது.