‘அஸ்வெசும’ -கடிதம்பெற வரிசையில் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு – பதுளையில் சோகம்

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவு தொடர்பான ஆவணத்தை பெறுவதற்காக, பதுளை, எல்ல பிரதேச செயலக வளாகத்தில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நமுனுகுல , தன்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த ராமசாமி குழந்தைவேலு (வயது 77) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

” அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக, வங்கி கணக்கை திறப்பதற்கு பிரதேச செயலகம் ஊடாக கடிதம் வழங்கப்பட்டுவருகின்றது. இந்த கடிதத்தை பெறுவதற்காக பிரதேச செயலகத்தின் முன்னால் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த போதே அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.” – என அப்பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles