அஸ்வெசும பயனாளர்களுக்கான செப்டம்பர் மாத கொடுப்பனவை நாளை (23) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
13,77,000 பயனாளி குடும்பங்களுக்காக 8571 மில்லியன் ரூபாவை வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வருட இறுதிக்கு முன்பாக செலுத்தி முடிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.