மாணவர் பருவத்தில் கொழும்பு ரோயல் கல்லூரியில் தனக்கு கற்பித்த ஆசிரியர் சிவலிங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஆசிபெற்றார் .
முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்கவும் மலிக் சமரவிக்ரமவும் சிவலிங்கம் ஆசிரியரிடம் கல்வி கற்றுள்ளனர்.
“ எதென்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் இளையோரின் எழுச்சி குறித்து ஆசிரியர் எங்களுக்கு கற்பித்தது நினைவிருக்கிறது.
அச்சமடைந்த நாட்டுக்குள் மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் செயற்படக்கூடாது என்பதை வலியுறுத்தினார். அதனால் தான் 2022 ஆம் ஆண்டில் சவால் மிக்க தருணத்தில் எவரும் ஏற்காத நாட்டை நான் பொறுப்பேற்றேன்.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.










