ஆசிய கிண்ணத்தொடர் 27 இல் ஆரம்பம் – 28 இல் இந்தியா, பாகிஸ்தான் பலப்பரீட்சை!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,பங்காளஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இலங்கையில் நடைபெற இருந்த இந்த தொடர் பின்னர் அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

ஆகஸ்ட் 27-ம் திகதி  தொடங்கும் முதல் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஆகஸ்ட் 28-ம் திகதி துபாயில் நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் திகதி 6-வதாக தகுதி அடையும் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது. சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி செப்டம்பர் 11-ம் திகதி துபாயில் நடைபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகின்றது.

Related Articles

Latest Articles