எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் சகலருக்கும் இலவசமாக தொடர் பரீட்சை வழிகாட்டல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான துறை சார் நிபுணர்களுடன் கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் நடத்தப்பட உள்ளன.
நுவரேலியா , பதுளை கண்டி, மாத்தளை, இரத்தினபுரி கேகாலை, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதான நகரங்களை மையப்படுத்தி இவ்வழிக்காட்டல் வகுப்புகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி பரிட்சைக்குரிய பாடத்திட்டத்துக்கு அமைவாக இந்த வழிகாட்டி வகுப்புகள் வடிவமைக்கப்படும்.
இலங்கையில் துறை ரீதியாக பாண்டித்தியம் பெற்ற விரிவுரையாளர்களைக் கொண்டு ஆசிரியர் உதவியாளர் போட்டி பரிட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்ப தாரிகளை பயிற்றுவிக்க ஆலோசித்து வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதி தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.