பொதுத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதாலேயே விமல் வீரவன்ச போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார் என்பதே உண்மை. அதற்காக அவர் கூறும் காரணங்கள் எமக்கு முக்கியம் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஆடத்தெரியாதவன் மேடைக் கோணல் எனக் காரணம் கூறுவதுபோல்தான், தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளவர்கள் தற்போது கதைகளைக் கூறிவருகின்றனர்.
மக்கள் தம்மை நிராகரித்துவிட்டனர் என்பது அவர்களுக்கு தெரியும். ஜனாதிபதி தேர்தலில் தாம் ஆதரவு வழங்கிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒரு ஆசனம்கூட கிடைக்காது என்பது அவர்களுக்கு தெரியும். அதனால்தான் பின்வாங்கியுள்ளனர்.
தோல்வியால் ஒதுங்கும் அவர்கள், அதற்காக கூறும் காரணங்கள் எமக்கு முக்கியமில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் சிறந்த அணியொன்றை களமிறங்கியுள்ளோம். அதற்கு மக்கள் நிச்சயம் ஆணை வழங்குவார்கள்.” – என்றார்.










