ஆட்டத்தை ஆரம்பித்தார் பஸில்! வடக்கில் டக்ளசும் கிழக்கில் பிள்ளையானும் பக்கபலம்!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச, இன்று முற்பகல் ஆன்மீக வழிபாட்டுடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

” உள்ளாட்சிசபைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தனித்தனியாகக் போட்டியிடுகிறோம். 252 உள்ளூராட்சிகளில் நேரடியாக மொட்டு அடையாளத்துடன் போட்டியிடுகிறோம். இன்னும் சில வேறு சில சின்னங்களில் உள்ளன. யாழ்ப்பாணத்தில் வீணையுடன் போட்டியிடுகிறது, மட்டக்களப்பு படகு, குதிரை ஆகியவற்றுடனும் களமிறங்குகின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles