மஹியங்கனை, தம்பராவ பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படு காயமடைந்துள்ளனர் என்று மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை , தம்பராவ விகாரைக்கு அருகாமையில் காரொன்றும், ஆட்டோவும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நால்வரின் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா










