ஆபத்தான மர மின்சார தூண்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தல்!

மரத்தில் போடப்பட்ட ஆபத்தான மின்சார தூண்களை அகற்ற வேண்டும் என மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.

13.09.2021 அன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

மஸ்கெலியா பகுதிகளில் மிக நீண்டகாலமாக மின்சார தூண்கள் மரத்தில் போடப்பட்டுள்ளன. மழை காலங்களில் என்ன நடக்குமோ என்று மக்கள் அச்சதோடு வாழ்ந்து வருகின்றனர். மிகவும் ஆபத்தான நிலையிலும் காணப்படுகின்றன. அதனை கொங்றீட் தூண்களை கொண்டு மாற்றவேண்டும்.

அது மட்டும் அன்றி கேபல்களும் போடப்பட்டு மிக நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. அதனையும் மாற்றி வயர் முறைக்கு மாற்றி கொடுக்குமாறு மஸ்கெலியா சபையில் பிரேரனையை முன் வைத்தபோது தவிசாளர்,உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதன் போது மின்வலு அமைச்சர், இலங்கை மின்சார சபை, மஸ்கெலியா மின்சாரசபைக்கு கடிதம் மூலம் அறிய கொடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

13.09.2012 அன்று மாலை 4.00மணியளவில் நிலைமையை மஸ்கெலிய மின்சார சபை முகாமையாளரை தொடர்பு கொண்டு ராஜ் அசோக் கலந்துரையாடிய போது வெகு விரைவில் மாற்றி தருவதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

Related Articles

Latest Articles