ஆப்கான்- பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி தொடர் ஒத்திவைப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுவரை பிற்போடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒரு நாள் போட்டி தொடர் நடத்த முடிவானது. இதன்படி, வருகிற செப்டம்பர் முதலாம் திகதி முதல்  8 ஆம் திகதிவரை போட்டிகள் நடத்துவது என திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனியிடம் இருந்து ஆட்சி அதிகாரம் தலீபான்கள் வசம் சென்றுள்ள நிலையில், விமான போக்குவரத்து பாதிப்புகள், வீரர்களின் மனநலம் ஆகியவற்றை காரணம் காட்டி இந்த போட்டி தொடர் வரும் 2022ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதனை இரு நாட்டு அணிகளின் கிரிக்கெட் சபைகளும் ஒப்புதல் அளித்து, முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.

Related Articles

Latest Articles