ஆரம்ப நிர்மானிப்புப் பணிகளை ஆரம்பித்துள்ள Prime Lands Residencies PLC – Amber Skye – Negombo நிர்மாணிப்புப் பணிகளில் 70% தற்போது நிறைவடைந்துள்ளது

  • Prime Lands Residencies PLCஇன் Amber Skye – Negombo சொகுசு மாடி வீட்டுத் திட்டத்தின் நிர்மாணிப்புப் பணிகளில் 70% பூர்த்தி
  • Prime Lands Residencies PLC நீர்கொழும்பில் நிர்மாணிக்கும் Amber Skye சொகுசு மாடி வீட்டுத் திட்டப் பணிகள் 70% நிறைவு

இலங்கையிலுள்ள பாரிய காணி கட்டட விற்பனை நிறுவனமான பிரைம் குழுமம், மிகப் பிரமாண்டமாக நிர்மாணித்து வரும் Prime Amber Skye, Negombo சொகுசு மாடி வீட்டுத் திட்டத்தின் ஆரம்ப நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் அங்குரார்ப்பண நிகழ்விற்கு Prime Lands Residencies PLCஇன் பணிப்பாளர்கள் மற்றும் பொதுமுகாமையாளர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்துது கொண்டனர்.

கடற்கரைக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் நீர்கொழும்பு, Amber Skye சொகுசு மாடி வீட்டுத் திட்டத்தின் 70% வீடுகள் விற்று தீர்ந்துள்ளதுடன், துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் பெறுமதியுடன் இலங்கையில் மிகவும் பிரபல்யமான இடத்தில் நிர்மாணிக்கப்படும் Amber Skye Negombo வாழ்க்கை முழுவதிலும் சிறந்த முதலீடாக மதிப்புமிக்க திட்டமாகும்.

Amber Skye, நீர்கொழும்பு உள்ளூர் முதலீட்டாளர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இலங்கையர்களை ஈர்ப்பதற்கு பிரதான காரணம் நீர்கொழும்பு ஒரு சுற்றுலா தளமாக இருத்தல் மற்றும் இந்த திட்டம் நீர்கொழும்பு Hotel Road அமைந்துள்ளமையால் ஆகும்.

மேலும் இங்கிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு 10 நிமிடங்களிலும், கொழும்பு நகரை 40 நிமிடங்களிலும் சென்றடைய முடியும்.

145 வீடுகளுடன் அமைக்கப்படும் Amber Skye Negombo மாடி வீட்டு தொகுதியிலுள்ள வீடொன்றின் விலை 22.5 மில்லியன் ரூபாவிலிருந்து ஆரம்பமாகின்றது.

இந்த திட்டமானது 2024ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நிர்மாணித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் மூன்று வருடம் முழுவதும் செலுத்தவேண்டிய கவர்ச்சிகரமான வட்டியில்லாத கொடுப்பனவு திட்டமொன்றையும் பெற்றுக் கொள்ள முடியும்.

“நீர்கொழும்பு போன்ற ஒரு சுற்றுலா இடமாக மிகவும் கவர்ச்சிகரமான சொகுசு வீட்டு மாடித் திட்டத்தின் ஆரம்ப கட்டுமானத்தை தொடங்கியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

எளிதில் அணுகக்கூடிய இடத்தில் ஆடம்பர மற்றும் வசதியான ஒரு அற்புதமான காட்சியுடன் அமைந்துள்ளது.

Amber Skye Negombo திட்டத்தால் ஆடம்பர வாழ்க்கை முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த கடற்கரை உடல் மற்றும் மன ரீதியான அமைதியை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விலைமதிப்பற்ற வாழ்க்கை அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் என்பதே எனது எண்ணமாகும்.” என பிரைம் குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மனகே தெரிவித்தார்.

இந்த சொகுசு மாடி வீடுகளின் உரிமையாளர்களுக்கு தினசரி 24 மணி நேர வரவேற்பு சேவைகள், விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடவசதி, திறந்த மாடி நீச்சல் குள வசதிகள், குழந்தைகளுக்கான நீச்சல் குள வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானம், யோகா பயிற்சி கூடம், தொலை தூரத்தை ரசிக்கக் கூடிய தொலைநோக்கி வசதி, உடற்பயிற்சி கூடம், BBQ Terrace, உடற்பயிற்சி உணவகம் மற்றும் சந்திப்பு மையம், அத்துடன் சாரதிகளுக்கான ஓய்வு பகுதி, ஆகியன Amber Skye Residencies வீட்டு மாடி கட்டடத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வளாகத்தில் பணியாளர்கள் குடியிருப்பு, சலவை வசதிகள், டிஜிட்டல் கண்காணிப்பு கேமரா அமைப்புடன் 24 மணி நேர பாதுகாப்பு, மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி நிறுத்துவதற்கான வசதிகளும் உள்ளன.

சுவையான உணவை அனுபவிக்கக்கூடிய பல நட்சத்திர சுற்றுலா ஹோட்டல்களுக்கு அருகில் அமைந்துள்ளதுடன், வரலாற்று சிறப்பு மிக்க நீர்கொழும்பில் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவர்ந்துள்ள முகத்துவார ஈரநிலங்கள், அத்துடன் நீர்கொழும்பு ஒல்லாந்தர்களின் கோட்டை, மாஓயா, ஒல்லாந்தர்களின் மணிக்கூட்டுக் கோபுரம், மொரவல கடற்கரை போன்ற இடங்களுக்கு மிக விரைவாக செல்லவும் முடியும்.

Related Articles

Latest Articles