ஆலய மணியின் கயிறு கழுத்து பகுதியில் இறுகியதால் 7 வயது சிறுவனொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று டிக்கோயா, டங்கல் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
டங்கல் தோட்டத்தின் மேல்பிரிவிலுள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முற்றத்தில் குறித்த சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கையில் இன்று முற்பகல் 10 .30 மணியளவில் இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
தரம் 2 இல் கல்வி பயிலும் விக்னேஸ்வரன் டிலுக்சன் என்ற 7 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.
பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தவேளை, குறித்த சிறுவன் இன்று தனியாகவே இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்










