ஆளுங்கட்சியினரும், எதிரணியினரும் அரசியல் பேதங்களை ஓதுக்கிவைத்துவிட்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைதேட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.
இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட அவர், மேலும் கூறியவை வருமாறு,
“ தற்போதைய சூழ்நிலையில் முதலில் நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை தேடலாம். இது குறித்து அரசியல் கட்சிகள் சிந்திப்பதாக தெரியவில்லை.
கோட்டா கோ ஹோம் என ஒரு புறத்தில் போராட்டம் நடக்கின்றது, எதிர்க்கட்சி பாத யாத்திரை செல்கின்றது. ஆளுங்கட்சியினர் பிளவுபட்டு 113 என்ற எண்கணித அரசியலில் ஈடுபடுகின்றனர். இவற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தீரபோவதில்லை.
எனவே, அரசியல் நிகழ்ச்சி நிரலை ஒதுக்கிவைத்துவிட்டு, நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த அனைத்து கட்சிகளும் முன்வரவேண்டும்.
மூளை பிரச்சினையெனில் உடல் வலிக்கு மருந்து எடுத்து பயன் இல்லை. நாட்டில் தற்போது அவ்வாறான நடவடிக்கைதான் இடம்பெறுகின்றது.” – என்றார் நாமல் ராஜபக்ச.