ஆள முடியாத கோட்டா – ரணில் அரசு பதவி விலக வேண்டும்! சஜித், அநுர வலியுறுத்து!

” நாடு இன்று முடங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுகின்றதாம். தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துவிட்டனர். எனவே, கோட்டா, ரணில் அரசு பதவி விலக வேண்டும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க,

” எரிபொருள் நெருக்கடினால் மாணவர்களுக்கு பாடசாலை செல்ல முடியவில்லை. மக்களுக்கு ஒரு நகரில் இருந்து இன்னுமொரு நகருக்கு செல்ல முடியவில்லை. மீனவர்களுக்கு கடற்றொழிலுக்கு செல்ல முடியாதுள்ளது. நோயாளிகளை வைத்தியசாலை கொண்டுசெல்ல வாகனம் இல்லை. இதனால் நாடு மேலும் வீழ்ச்சியடையும். எனவே, இந்த அரசு வீடு செல்ல வேண்டும்.” – என வலியுறுத்தினார் .

சஜித் பிரேமதாசவும் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

Related Articles

Latest Articles